உலக செய்திகள்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவிக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு!

அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா பாதிப்பு மீண்டும் உறுதியானது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் முதல் பெண்மணி என்றழைக்கப்படும் அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா பாதிப்பு மீண்டும் உறுதியானது.

இதனையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு புதன்கிழமை கொரோனா சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை.

இதனையடுத்து ஜில் பைடன் டெலாவேரில் உள்ள இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அவருக்கு அறிகுறிகள் ஏதுமில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனினும், ஜில் பைடனை சந்தித்து இருந்ததால், அதிபர் ஜோ பைடனும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையங்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி 10 நாட்களுக்கு வீட்டிற்குள் தனிமைப்படுத்திக் கொள்வார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு