வாஷிங்டன்
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். ஆனால், வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 19 லட்சத்து 97 ஆயிரத்து 620 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, இதுவரையிலும் 4 லட்சத்துக்கு 78 ஆயிரத்து 425 பேர் குணமாகியுள்ளனர்.தற்போது அமெரிக்காவில் மட்டும் 6 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 407 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 47 ஆக அதிகரித்துள்ளது.