வாஷிங்டன்
அமெரிக்கா வட கொரிய அரசை கவிழ்க்க நினைக்காது ஆனால் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அதனுடன் பேச்சு வார்த்தை நடத்தலாம் என்று அவர் கூறினார்.
நாங்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை, ஆட்சி வீழ்வதையோ, கொரிய தீபகற்பத்தின் இரு நாடுகளும் விரைவில் இணைவதையோ (வட - தென் கொரியா) அல்லது எங்களது படைகளை வட கொரியா நோக்கி செலுத்துவதற்கோ நினைக்கவில்லை என்றார் அவர். அமைச்சகத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில் இதைத் தெரிவித்தார் டில்லர்சன்.
நாங்கள் உங்களின் எதிரிகள் அல்ல... ஆனால் நீங்கள் ஒப்புக்கொள்ள முடியாத அச்சுறுத்தல் ஒன்றை எங்கள் முன் வைக்கிறீர்கள்; அதற்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டியுள்ளது. நாங்கள் அவர்கள் ஏதேனுன் ஒரு சந்தர்ப்பத்தில் எங்களை புரிந்து கொண்டு எங்களுடன் பேசுவதற்கு முன் வருவார்கள் என்று நம்புகிறோம் என்றார் டில்லர்சன்.