உலக செய்திகள்

இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது: ஹூஸ்டன் நிகழ்ச்சிக்கு பிறகு டிரம்ப் டுவிட்

இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது என்று ஹூஸ்டன் நிகழ்ச்சிக்கு பிறகு டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஹூஸ்டன் நகரில் இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த நலமா மோடி (ஹவுடி மோடி) நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு நிகழ்வாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா- அமெரிக்கா இடையேயான உறவு பற்றியும் பயங்கரவாதத்திற்கு எதிராக இணைந்து போரிடுவதன் முக்கியத்துவம் பற்றியும் பேசினார்.

அதேபோல், டொனால்டு டிரம்பும் இந்த நிகழ்ச்சியில் பேசினார். அப்போது, முன் எந்த அமெரிக்க அதிபர்களை விடவும் இந்தியாவுடன் மிகச்சிறந்த நட்புறவை தான் கடைபிடித்து வருவதாக டிரம்ப் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டரில், இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு