உலக செய்திகள்

இந்தியாவின் இருமல் சிரப் குடித்ததால் 18 குழந்தைகள் பலி- உஸ்பெஸ்கிதான் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நிறுவனத்தின் இருமல் மருந்தை குடித்ததால் 18 குழந்தைகள் பலியானதாக உஸ்பெஸ்கிதான் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்ததால் 18 குழந்தைகள் பலியாகி இருப்பதாக உஸ்பெஸ்கிதான் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. நொய்டாவில் உள்ள மேரியன் பயோடெக்(Marion Biotech) என்ற நிறுவனம் தயரித்த இருமல் மருந்ததான டாக்-1 மேக்ஸ் என்ற சிரப்பை குடித்ததால் 18 பேர் உயிரிழந்ததாகவும் ஆய்வக பரிசோதனையில் எத்திலின் கிளைகோல் என்ற நச்சுப்பொருள் இருந்ததாகவும் உஸ்பெஸ்கிஸ்தான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த மருந்துகள் மருத்துவர்கள் பரிந்துரையின்றி அதாவது பெற்றோர்கள் அல்லது பார்மாசிஸ்டுகளின் அறிவுறுத்தலில் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு நிலையான அளவை தாண்டி கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 18 குழந்தைகள் உயிரிழப்பை தொடர்ந்து டாக்-1 மேக்ஸ் மாத்திரைகள் மற்றும் சிரப்கள் அனைத்து பார்மசிக்களில் இருந்தும் திரும்பப் பெறப்பட்டு விட்டதாகவும் உஸ்பெஸ்கிதான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு