உலக செய்திகள்

அமெரிக்க வெளியுறவு துணை செயலாளருடன் வினய் குவாத்ரா சந்திப்பு; இந்தோ-பசிபிக் பிராந்திய விவகாரங்கள் பற்றி ஆலோசனை

இந்திய வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா அமெரிக்க வெளியுறவு துணை செயலாளர் வெண்டி ஷெர்மானை சந்தித்து இந்தோ-பசிபிக் பிராந்திய விவகாரங்களை பற்றி பகிர்ந்து கொண்டனர்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

இந்திய வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா அமெரிக்காவில் அந்நாட்டு வெளியுறவு துணை செயலாளரான வெண்டி ஷெர்மானை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றி ஆலோசிக்கப்பட்டது.

ஜனநாயக கொள்கைகள், மண்டல பாதுகாப்பு மற்றும் வளம் மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவது ஆகிய இரு நாட்டு விவகாரங்கள் பற்றியும் செயல்திட்டங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன என இதுபற்றி அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று, குவாட் அமைப்பின் நட்புரீதியிலான உறவின் வழியே மண்டல மற்றும் பலதரப்பு ஒருங்கிணைப்புடன், இந்தோ-பசிபிக் பிராந்திய பகுதிகளின் விவகாரங்களை மேம்படுத்துவது பற்றியும், உக்ரைனுக்கு எதிரான ரஷிய போர் ஆகியவை பற்றியும் இருவரும் ஆலோசனை கொண்டனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது