உலக செய்திகள்

இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ; அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தகவல்

இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது

தினத்தந்தி

வாஷிங்டன், 

உக்ரைன், ரஷியா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில், ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்க அரசு கடுமையான வரிவிதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அதேவேளை, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரு தரப்பும் இதுவரை 5 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகையில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் நேற்று பதவியேற்றார். பதவியேற்பு நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பேசியதாவது ,

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா பெருமளவு குறைத்துள்ளது. ஏதாவது ஒரு கட்டத்தில் இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட வரி குறைக்கப்படும். இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்றார்.

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி