உலக செய்திகள்

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5.84 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.04 கோடியாக உயர்ந்துள்ளது.

தினத்தந்தி

ஜெனீவா,

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 5,84,68,280 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4,04,51,799 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 13 லட்சத்து 85 ஆயிரத்து 714 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 1,66,30,767 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,02,369 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - பாதிப்பு - 1,24.39,966, உயிரிழப்பு - 2,61,757, குணமடைந்தோர் - 74,00,815

இந்தியா - பாதிப்பு - 90,95,908, உயிரிழப்பு - 1,33,263, குணமடைந்தோர் - 85,20,039

பிரேசில் - பாதிப்பு - 60,52,786, உயிரிழப்பு - 1,69,016, குணமடைந்தோர் - 54,29,158

பிரான்ஸ் - பாதிப்பு - 21,27,051, உயிரிழப்பு - 48,518, குணமடைந்தோர் - 1,49,521

ரஷியா - பாதிப்பு - 20,64,748, உயிரிழப்பு - 35,778, குணமடைந்தோர் -15,77,435

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

ஸ்பெயின் -15,89,219

இங்கிலாந்து - 14,93,383

இத்தாலி - 13,80,531

அர்ஜென்டினா - 13,66,182

கொலம்பியா - 12,40,493

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது