Image Courtesy: AFP 
உலக செய்திகள்

ஐரோப்பிய யூனியனில் விரைவான உறுப்பினர் அந்தஸ்து - உக்ரைன் அதிபர் கோரிக்கை

ஐரோப்பிய யூனியனில் விரைவான உறுப்பினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்தார்.

லிவிவ்,

நேட்டோ அமைப்பில் உறுப்பினர் பதவி கோரிக்கையை கைவிடுவதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்த நிலையில் அவர் ஐரோப்பிய கூட்டமைப்பில் உக்ரைனுக்கு உறுப்பினர் அந்தஸ்து விரைவாக கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

இதுபற்றி அவர் பெல்ஜியத்தின் தலைநகரான பிரசல்ஸ் நகரில் கூடிய ஐரோப்பிய தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கையில், இங்கு நான் உங்களிடம் கேட்கிறேன். தாமதிக்காதீர்கள். தயவுசெய்து எங்களுக்கு விரைவான உறுப்பினர் அந்தஸ்து தாருங்கள். இது எங்களுக்கு ஒரு வாய்ப்பு என கேட்டுக்கொண்டார்.

உக்ரைனின் இந்த வேண்டுகோளுக்கு தடையாக இருந்து விடாதீர்கள் என்று அவர் ஜெர்மனிக்கும், ஹங்கேரிக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்