ஆன்மிகம்

காமாட்சியம்மன் கோவிலில் 1008 விளக்கு பூஜை

பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த அம்மையார் குப்பம் கிராமத்தில் காமாட்சியம்மன் கோவிலில் 1008 விளக்கு பூஜை நடைபெற்றது.

பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் அம்மையார் குப்பம் கிராமத்தில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிவிழா நடைபெற்றது. விழாவையொட்டி கோவிலின் முன்பு 1008 சுமங்கலி பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தினர். அதன் பிறகு பக்தர் ஒருவர் இந்த கோவிலுக்கு நன்கொடையாக வழங்கிய அன்ன வாகனத்தில் காமாட்சி அம்மனை அலங்கரித்து கிராம தெருக்களில் ஊர்வலமாக கொண்டு சென்றனர். இந்த விழாவில் சுற்றுவட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு காமாட்சி அம்மனை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கோவில் கோபுரங்கள் அனைத்தும் விதவிதமான வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு