ஆன்மிகம்

பிரம்மோற்சவ விழா: நாகூ நாகநாதசுவாமி கோவிலில் தேரோட்டம்

நாகூ நாகநாதசுவாமி கோவில் ஆனி மாத பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது.

தினத்தந்தி

நாகை மாவட்டம் நாகூரில் உள்ள நாகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீநாகநாத சுவாமி கோவில் உள்ளது. மூத்தி, தலம், தீத்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புப் பெற்ற தலமாகவும், காசிக்கு இணையானதாகவும், ராகு, கேது, காலசர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

நேற்று காலை ஸ்ரீதியாகராஜப் பெருமானுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இரவு நிகழ்ச்சியாக, கைலாய வாகனத்தில் சுவாமி வீதியுலாவும், அதைத் தொடாந்து ஸ்ரீதியாகராஜப் பெருமான் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. காலை சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னா நகர்மன்ற துணை தலைவர் செந்தில்குமார், அறநிலையத் துறை துணை ஆணையர் ராணி, செயல் அலுவலர் கார்த்திகேசன் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்