ஆன்மிகம்

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் தொடக்கம்

ஆடிப்பூர உற்சவம் வருகிற 28-ந்தேதி வரை நடைபெறுகிறது.

தினத்தந்தி

காஞ்சீபுரம்,

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடிப்பூர உற்சவம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஆடி மாதம் தொடங்கிய நிலையில், ஆண்டாள் நாச்சியார் திருமண கோலம் கண்டருளும் ஆடிப்பூர உற்சவம் இன்று முதல் தொடங்கி வருகிற 28-ந்தேதி வரை நடைபெறுகிறது.

முதல் நாளான இன்று ஆண்டாள் நாச்சியாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, வெங்காய நிற பட்டு உடுத்தி, திருவாபரணங்கள், மலர் மாலைகள் சூட்டி, சிறப்பு அலங்காரத்தில், மேள தாள வாத்தியங்கள் முழங்க வேதபாராயண கோஷ்டியினர் பாடி வர சன்னதி வீதியில் ஊர்வலமாக சென்று திருவடி கோவிலில் சேவை சாதித்தார்.

பின்னர் கோவிலுக்கு திரும்பிய ஆண்டாள் நாச்சியாருக்கு கற்பூர தீபாராதனை காட்டியதை தொடர்ந்து சன்னதிக்கு எழுந்தருளி பக்தர்கள் முன்னிலையில் ஊஞ்சல் சேவை கண்டருளினார். ஆடிப்பூர உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆண்டாள் நாச்சியாரை தரிசனம் செய்து வணங்கி வழிபட்டனர். முக்கிய உற்சவமான ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாண உற்சவம் வருகிற 28-ந் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு