ஆன்மிகம்

ஆதியோகி, தியானலிங்கத்தை ஜூலை 1-ஆம் தேதி தரிசனம் செய்ய அனுமதி இல்லை

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பக்தர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினத்தந்தி

கோவை ஈஷா யோகா மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவை ஈஷா யோகா மையத்திற்கு தியானலிங்கம், லிங்கபைரவி மற்றும் ஆதியோகியை தரிசிப்பதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உலகம் முழுவதிலும் இருந்து வருகை தருகின்றனர்.

இந்நிலையில் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக ஜூலை 1 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் ஆதியோகி, தியானலிங்கம் மற்றும் லிங்கபைரவி வளாகங்களில் பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி இல்லை. இடையூறுகளுக்கு வருந்துகிறோம். மேலும் ஜூலை 2 ஆம் தேதி முதல் வழக்கம் போல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு