ஆன்மிகம்

மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ தேர் திருவிழா

கிழக்கு மாட வீதியில் இருந்து புறப்பட்ட தேர், மேளதாளங்கள் முழங்க கோவிலை சுற்றியுள்ள மாட வீதிகளில் பக்தர்கள் சூழ வலம் வந்தது.

தினத்தந்தி

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் அருள்மிகு ஸ்ரீ தேனுகாம்பாள் உடனுறை ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் திருக்கோவிலில் 12வது பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. சந்திரசேகரர் திருத்தேரில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.

கோவில் கிழக்கு மாட வீதியில் இருந்து புறப்பட்ட தேர், மேளதாளங்கள் முழங்க கோவிலை சுற்றியுள்ள மாட வீதிகளில் பக்தர்கள் சூழ வலம் வந்தது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த திருத்தலத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு 'கோவிந்தா... கோவிந்தா' என்ற பக்தி முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது