ஆன்மிகம்

திருப்பதி பிரம்மோற்சவம்: பிரகாசமான சூரியபிரபை வாகனத்தில் கோவிந்தராஜ சுவாமி வீதி உலா

வாகன சேவைக்கு முன்னால் பல்வேறு கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினத்தந்தி

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவின் 7-ம் நாளான இன்று காலையில் சூரியபிரபை வாகன சேவை நடைபெற்றது. கண்களை கூசச் செய்யும் பிரகாசமான சூரியபிரபை வாகனத்தில் உற்சவர் கோவிந்தராஜ சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

வாகன சேவைக்கு முன்னால் கலைஞர்கள் நாட்டியம், பஜனை மற்றும் மங்கள வாத்திய இசை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

இந்நிகழ்வில் திருமலையின் இரு ஜீயர்கள், தேவஸ்தான துணை செயல் அதிகாரி சாந்தி மற்றும் நான்கு மாடவீதிகளில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பகவானை தரிசனம் செய்தனர். நாளை (9-ந்தேதி) தேரோட்டம் நடைபெறுகிறது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை