ஆன்மிகம்

சென்னை பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவம்- சிம்ம வாகன சேவை

சென்னை பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவ விழா 26-ம் தேதி வரை நடைபெறுகிறது.

திருப்பதியில் இருப்பதுபோல் சென்னை தி.நகரில் பத்மாவதி தாயார் கோவில் உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தில் உள்ள இக்கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் வாகன சேவை நடைபெறுகிறது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தாயார் எழுந்தருளி அருள்பாலித்துவருகிறார்.

அவ்வகையில் நேற்று இரவு சிம்ம வாகனத்தில் யோக நரசிம்மர் அலங்காரத்தில் தாயார் எழுந்தருளி அருள்பாலித்தார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தாயாரை தரிசனம் செய்தனர்.

இன்று கல்பவிருட்ச வாகனத்தில் தாயார் எழுந்தருள்கிறார். கடந்த 16-ம் தேதி தொடங்கிய பிரம்மோற்சவ விழா 26-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்