ஆன்மிகம்

சந்தனக்காப்பு இல்லாமல் அருள்பாலித்த மரகத நடராஜர்.. 4-ம் தேதி வரை தரிசனம் செய்யலாம்

உத்திரகோசமங்கை கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சந்தனக்காப்பு களையப்பட்டு அபூர்வ மரகத நடராஜரை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை ஸ்தலத்தில் மங்களநாத சுவாமி மங்களேஸ்வரி அம்மன் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 4-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானம், தமிழக அரசு மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் வழங்கப்பட்ட பல கோடி ரூபாய் நிதி மூலம் திருப்பணிகள் முடிவடைந்துள்ளன. 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியில் இருந்து 11 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு கோவிலில் அமைந்துள்ள அபூர்வ மரகத நடராஜர் சன்னதியானது நேற்று நள்ளிரவு திறக்கப்பட்டு மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்ட சந்தனம் களையப்பட்டது. அப்போது திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

2010-ல் கும்பாபிஷேகம் நடந்தபோதும் பச்சை மரகத நடராஜருக்கு பூசப்பட்டிருந்த சந்தனக்காப்பு களையப்பட்டு மூன்று நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோன்று இந்த ஆண்டு கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சந்தனக்காப்பு களையப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

கும்பாபிஷேக தினமான 4-ம் தேதி வரை சந்தனாதி தைலம் பூசப்பட்ட பச்சை மரகத நடராஜரை பொதுமக்கள் தரிசனம் செய்யலாம். கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் மாலையில் சந்தனம் சார்த்தப்பட்டு மீண்டும் நடராஜர் சன்னதி சார்த்தப்படுகிறது. 

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு