ஆன்மிகம்

கார்த்திகை மாத பவுர்ணமி.. தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசாமி

தங்க, வைர நகைகள் அலங்காரத்தில் மாடவீதிகளில் வலம் வந்த மலையப்பசாமியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருப்பதி:

திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு கருடசேவை நடப்பது வழக்கம். அதன்படி நேற்று இரவு கார்த்திகை மாத பவுர்ணமி கருடசேவை நடந்தது.

கோவிலில் இருந்து ஊழியர்கள் உற்சவர் மலையப்பசாமியை வாகன மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு உற்சவரை தங்கக் கருட வாகனத்தில் வைத்து சிறப்பு அலங்காரம் செய்தனர். அலங்காரம் முடிந்ததும் சிறப்புப்பூஜைகள் செய்து வாகனச் சேவை தொடங்கியது.

இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை தங்க, வைர நகைகள் அலங்காரத்தில் உற்சவர் மலையப்பசாமி தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது மாடவீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையப்பசாமியை தரிசனம் செய்தனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு