ஆன்மிகம்

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

கோவில் வளாகம், சுவர்கள், கூரை, பூஜை சாமான்கள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டது.

தினத்தந்தி

திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி ஆலயத்தில் 20-தேதி தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு இன்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.

இன்று காலையில் சுப்ரபாதத்துடன் சுவாமி எழுந்தருள செய்யப்பட்டு, தோமால சேவை, நிவேதனம், அர்ச்சனை சாற்றுமுறை நடைபெற்றது. அதன் பிறகு கோவில் வளாகம், சுவர்கள், கூரை, பூஜை சாமான்கள் அனைத்தும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது.

பின்னர் நாமக்கோபு, ஸ்ரீ சூரணம், கஸ்தூரி மஞ்சள், கற்பூரம், சந்தன பொடி, குங்குமம், சுகந்த திரவியங்கள் கலந்த புனித நீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது. அதன் பிறகு 9:30 மணிக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை