ஆன்மிகம்

குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் கொடை விழா.. நாளை கால் நாட்டும் நிகழ்ச்சி

மதிய பூஜைக்குப் பிறகு முப்புடாதி அம்மன் சன்னதி முன்பு திருவிழாவிற்கான கால் நாட்டப்படுகிறது.

தினத்தந்தி

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஶ்ரீ குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் ஆனி பெருந்திருவிழா (கொடை விழா), ஜூலை மாதம் 15ம் தேதி (செவ்வாய் கிழமை) நடைபெறுகிறது.

கொடை விழாவை முன்னிட்டு நாளை (ஜூலை 1ம் தேதி) செவ்வாய் கிழமை கால்நாட்டு விழா நடைபெறுகிறது. இதையொட்டி நாளை அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து மதியம் 1 மணிக்கு அம்மனுக்கு மதிய பூஜை நடைபெறும். பின்னர் முப்புடாதி அம்மன் சன்னதி முன்பு கால் நாட்டு விழா நடைபெறுகிறது. கொடை விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது