ஆன்மிகம்

மெலட்டூர் ஏர்வாடி திரௌபதியம்மன் கோவில் சித்திரை திருவிழா

அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தினத்தந்தி

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா, மெலட்டூர் ஏர்வாடி கிராமத்தில் ஸ்ரீ திரௌபதியம்மன் கோவில் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பால்குடம், காவடி எடுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தும், செடல் காவடி எடுத்தும் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர்.

தொடர்ந்து அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏர்வாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று திங்கள்கிழமை இரவு தீமிதி திருவிழா நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை கிராம வாசிகள் செய்து வருகின்றனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு