ஆன்மிகம்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 16-ந் தேதி நடை திறப்பு

17-ந் தேதி முதல் டிசம்பர் 27-ந் தேதி வரை 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும்.

தினத்தந்தி

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு ஆண்டு மண்டல மகரவிளக்கு சீசனை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற 16-ந் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். 17-ந் தேதி முதல் டிசம்பர் 27-ந் தேதி வரை 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும். 27-ந் தேதி இரவு நடை அடைக்கப்படும்.

மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் மாதம் 30-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். 31-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 15-ந் தேதி வரை மகரவிளக்கு பூஜைகள் நடைபெறும். அன்று மாலை 6.30 மணிக்கு மகர ஜோதி தரிசனம் நடைபெறும். தொடர்ந்து 19-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும். 20-ந் தேதி காலையில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனத்திற்கு பின்னர் கோவில் நடை அடைக்கப்படும். அன்றுடன் நடப்பு மண்டல மகரவிளக்கு சீசன் நிறைவுபெறும்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை