ஆன்மிகம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் ஆனி சுவாதி உற்சவ திருவிழா

வருகிற 14-ந் தேதி செப்பு தேரோட்டம் நடக்கிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தனி சன்னதியில் பெரியாழ்வார் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் பெரியாழ்வார் ஆனி சுவாதி உற்சவ திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை 10 மணிக்கு பெரியாழ்வார் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. விழாவில் ஆண்டாள் கோவில் நிர்வாக அதிகாரி லட்சுமணன், ஆய்வாளர் முத்து மணிகண்டன், அறங்காவலர்கள், பட்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவினை முன்னிட்டு வருகிற 14-ந் தேதி செப்பு தேரோட்டம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆண்டாள் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்