ஆன்மிகம்

சோழவந்தான் மற்றும் திருவேடகத்தில் பிரதோஷ விழா

பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

தினத்தந்தி

சோழவந்தான் வைகை ஆற்றங்கரையில் உள்ள பிரளயநாதர் ஆலயத்தில் ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவையொட்டி நந்தி பகவானுக்கு பால், தயிர், வெண்ணெய், சந்தனம், பன்னீர், இளநீர், மஞ்சள் பொடி, மா பொடி, திரவிய பொடி உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து ரிஷப வாகனத்தில் சுவாமியும் அம்பாளும் திருக்கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் கீழமாத்தூர் உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் ஆலயம், திருவேடகம் ஏடகநாதர் சமேத ஏலவாழ் குலழி அம்மன் கோவில், தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோவில், மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷ விழா நடைபெற்றது. 

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு