ஆன்மிகம்

புஞ்சைபுளியம்பட்டிதண்டாயுதபாணி சாமி கோவில் கும்பாபிஷேகம்

புஞ்சைபுளியம்பட்டி தண்டாயுதபாணி சாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டியில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த ஒரு ஆண்டாக திருப்பணிகள் நடைபெற்று வந்தது. திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேக விழா கடந்த 7-ந் தேதி கணபதி யாகத்துடன் தொடங்கி முதல் கால யாக பூஜை, 2-ம் கால யாக பூஜை நடந்தது. நேற்று முன்தினம் இரவு 3-ம் கால யாக பூஜை நடைபெற்றது.

நேற்று காலை 4-ம் கால யாக பூஜயும், மகா தீபாராதனையும் நடந்தது. இதையடுத்து மேளதாளங்கள் முழங்க புனிதநீர் அடங்கிய கலசங்கள் கோவிலை வலம் வந்து கோவில் கோபுரத்தை சென்றடைந்தது. இதைத்தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷகம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

பின்னர் பரிவார மூர்த்திகளுக்கும், தண்டாயுதபாணி சாமிக்கும் புனித நீர் ஊற்றி மகா அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு