ஆன்மிகம்

முருகன் கோவில்களில் சஷ்டி வழிபாடு

சஷ்டியை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

தினத்தந்தி

முருகப்பெருமானை வழிபடுவதற்கு உகந்த சஷ்டி தினமான இன்று, விரதம் இருக்கும் பக்தர்கள் வீடுகளில் முருகப்பெருமானுக்கு நைவேத்யங்கள் படைத்து பூஜை செய்து வழிபடுகின்றனர். சஷ்டியை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் மயில்ரங்கம் ஈஸ்வரன் கோவில் வளாக ஸ்ரீ ஆறுமுகப்பெருமான் கோவில், வெள்ளக்கோவில் சோழீஸ்வரர் கோவில் வளாக ஸ்ரீ வள்ளி தேவசேனா சுப்பிரமணியர் கோவில். உப்பு பாளையம் சாலை முத்துக்குமார் நகர் பாலமுருகன் கோவில், எல். கே. சி. நகர் ஸ்ரீ பாலமுருகன் கோவில். மேட்டுப்பாளையம் புஷ்பகிரி வேலாயுத ஸ்கந்தசாமி கோவில் சுப்பிரமணிய கவுண்டன் வலசு வேல்முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

சுவாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், மஞ்சள் குங்குமம், மலர்கள், கனிகள், இளநீர், பன்னீர் உட்பட பல்வேறு பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு வழிபாடுகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்கின்றனர். குறிப்பாக, இன்று அதிகாலை முதலே கோவில்களில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை