ஆன்மிகம்

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு

சிறப்பு வழிபாட்டில் விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.

தினத்தந்தி

சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தேன் உள்ளிட்ட பதினாறு வகை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சிறப்பு வழிபாட்டில் விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் அக்கினி சட்டி எடுத்தும், முடி காணிக்கை செலுத்தியும், பொங்கல் வைத்தும் வழிபட்டனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை