ஆன்மிகம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் திருவடி கோவில் புறப்பாடு உற்சவம்

ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாள் சன்னதி தெருவில் வீதியுலா வந்து திருவடி கோவிலுக்கு எழுந்தருளி சேவை சாதித்து பின்னர் கோவிலுக்கு திரும்பினார்.

தினத்தந்தி

108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஆவணி மாதம் அமாவாசையையொட்டி திருவடி கோவில் புறப்பாடு உற்சவம் நடைபெற்றது.

இதையொட்டி திருவீதிஉலா வந்த வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, வெண் பட்டு உடுத்தி, வைர, வைடூரிய தங்க, திருவாபரணங்கள், மல்லிகைப்பூ, கொடி சம்பங்கி பூ, பஞ்ச வர்ண மலர் மாலைகள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பின்னர் மேளதாளங்கள் முழங்க, வேத பாராயண கோஷ்டியினர் பாடிவர ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாள் சன்னதி தெருவில் வீதியுலா வந்து திருவடி கோவிலுக்கு எழுந்தருளி சேவை சாதித்து பின்னர் கோவிலுக்கு திரும்பினார்.ஸ்ரீதேவி, பூதேவியுடன், திருவடி கோவிலுக்கு எழுந்தருளிய வரதராஜ பெருமாளை வழியெங்கும் திரளான பக்தர்கள் தரிசித்தனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை