புதுச்சேரி

வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு

காரைக்காலில் நடந்த கடற்கரை கைபந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கலெக்டர் முகமது மன்சூர் பரிசு வழங்கினார்.

காரைக்கால்

காரைக்காலில் கடந்த 3 நாட்களாக கல்லூரிகளுக்கு இடையேயான கடற்கரை கைப்பந்து போட்டி நடந்தது. போட்டியில் ஆண்கள் பிரிவில் 19 அணிகளும், பெண்கள் பிரிவில் 13 அணிகளும் கலந்து கொண்டு விளையாடின. போட்டியின் முடிவில் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி அணிகள் ஆண்கள் பிரிவில் முதல் மற்றும் 3-ம் பரிசுகளை பெற்றன. டான்போஸ்கோ கல்லூரி 2-ம் பரிசை பெற்றது.

பெண்கள் பிரிவில் அவ்வையார் மகளிர் அரசு கல்லூரி அணிகள் முதல் மற்றும் 3 -வது இடங்களையும், அறிஞர் அண்ணா அரசு கல்லூரி 2-ம் இடத்தையும் பிடித்தன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர் தலைமை தாங்கி பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில், துணை கலெக்டர் பாஸ்கரன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்