மும்பை

மாகிம் ரெயில் நிலையம் அருகே கொலையான பெண்ணின் உடல் மீட்பு

மாகிம் ரெயில் நிலையம் அருகே கொலையான பெண்ணின் உடலை போலீசார் மீட்டனர்.

மும்பை,

மும்பை மேற்கு ரெயில்வே மாகிம் ரெயில் நிலையம் அருகே நேற்று காலை 9.30 மணி அளவில் தண்டவாளம் அருகே பிளாஸ்டிக் சாக்கு பையில் பெண்ணின் உடல் கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு மோட்டார் மேன் தகவல் தெரிவித்தார். இதன்பேரில் மும்பை சென்ட்ரல் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு ஆய்வு நடத்தினர். இதில் கழுத்து அறுக்கப்பட்டும், வயிற்றில் 4 இடத்தில் கத்தி குத்து விழுந்தும் உள்ளது. பிணமாக மீட்கப்பட்ட பெண்ணின் கைகளில் பச்சை குத்தப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து உடலை பிரேத பரிசோதனைக்காக நாயர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் கொலையுண்ட பெண் சரிகா சால்கே (வயது28) என்பது தெரியவந்தது. மேலும் பெண்ணுடன் தொடர்பில் இருந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு