மும்பை

அஜித்பவாருடன் ரோகித் பவார் திடீர் சந்திப்பு

துணை முதல்-மந்திரி அஜித்பவாரை ரோகித் பவார் திடீரென சந்தித்து பேசினார்.

தினத்தந்தி

மும்பை, 

துணை முதல்-மந்திரி அஜித்பவாரை ரோகித் பவார் திடீரென சந்தித்து பேசினார்.

ரோகித் பவார்

தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித்பவார் சமீபத்தில் சிவசேனா-பா.ஜனதா கூட்டணி அரசில் தனது கட்சி சகாக்களுடன் இணைந்ததுடன், துணை முதல்-மந்திரியாகி உள்ளார். ஆனால் சரத்பவார் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது. அஜித்பவார் பெரியப்பா மகனும், கர்ஜத்- ஜாம்கேட் தெகுதி எம்.எல்.ஏ.வுமான ரோகித் பவார் சரத்பவார் அணியில் உள்ளார்.

திடீர் சந்திப்பு

இந்தநிலையில் நேற்று சட்டசபை மழைக்கால கூட்டத்தொடரின் போது துணை முதல்-மந்திரி அஜித்பவாரை, ரோகித்பவார் திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சட்டசபை வளாகத்தில் உள்ள துணை முதல்-மந்திரியின் அறையில் நடந்தது. ரோகித்பவார் எம்.எல்.ஏ. தனது தொகுதி தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக துணை முதல்-மந்திரியை சந்தித்ததாக கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது