சினிமா துளிகள்

எஸ்.ஜே.சூர்யா 'பொம்மை' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொம்மை’. இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது.

இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள படம் 'பொம்மை'. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது. மேலும், சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளியானது.

இந்நிலையில், 'பொம்மை' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்