மிலிந்த் ராவ் டைரக்ஷனில் நெற்றிக்கண்படத்திலும் அவர் நடிக்கிறார். இந்த படத்தை அவருடைய காதலர் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார்.
ஒரு வழக்கை விசாரிக்கும் பெண் போலீஸ் அதிகாரி திடீரென விபத்தில் சிக்கி பார்வையை இழக்கிறார். பார்வையிழந்த அந்த அதிகாரி எப்படி வழக்கை முடிக்கிறார்? என்ற கிரைம் திரில்லர் கதையே நெற்றிக்கண்.
கொரியா மொழியில் வெளியான பிளைண்ட் படத்தை தழுவி இந்த படம் உருவாகிறது.
இது, இந்தியிலும் ரீமேக் செய்யப் படுகிறது. சவாலான இந்த கதாபாத்திரத் தில், சோனம் கபூர் நடிக்கிறார்.