கர்நாடகா தேர்தல்

"அ.தி.மு.க.விற்கு ஆதரவு அலை வீசுகிறது" - ராஜேந்திரபாலாஜி பேட்டி

தி.மு.க.விற்கு எதிர்ப்பு அலையும், அ.தி.மு.க.விற்கு ஆதரவு அலையும் வீசுகிறது என ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

தினத்தந்தி

விருதுநகர்,

விருதுநகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது ,

அ.தி.மு.க. கூட்டணி தொண்டர்கள் பலம் பொருந்திய கூட்டணி; தி.மு.க. ஆட்சியின் குறைகள் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு வழி வகுக்கும்.தமிழ்நாட்டை பொறுத்தவரை 2 முனைப் போட்டி மட்டும் தான். அ.தி.மு.க. கூட்டணிக்கும், தி.மு.க. கூட்டணிக்கும் தான் போட்டி.

தி.மு.க. சொல்வதை மக்கள் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், 3 ஆண்டு காலமாக தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போது நீட் தேர்வு விலக்கிற்கு ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை?.நாடாளுமன்றத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு தி.மு.க. வின் 38 எம்பிக்கள் ஏன் நாடாளுமன்றத்தை முடக்கவில்லை?.அ.தி.மு.க. தர்மத்தின் பக்கம் இருக்கிற கூட்டணியை அமைத்துள்ளது.  தமிழ்நாட்டில் தி.மு.க.விற்கு எதிர்ப்பு அலையும், அ.தி.மு.க.விற்கு ஆதரவு அலையும் வீசுகிறது. என தெரிவித்தார். 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

அஜித் பவார், ஜியா மறைவுக்கு மக்களவையில் இரங்கல்; நாள் முழுமைக்கும் அவை ஒத்தி வைப்பு

அஜித் பவார் விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் போதிய வெளிச்சமின்மை நிலவியது; விமானப்போக்குவரத்து மந்திரி