நாடாளுமன்ற தேர்தல்-2024

பிரசாரத்தில் ஈடுபட்டபோது திடீரென உடல் நலக்குறைவு - மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி

மன்சூர் அலிகான் இன்று குடியாத்தம் பகுதியில் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்

தினத்தந்தி

வேலூர்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் மன்சூர் அலிகான் இன்று குடியாத்தம் பகுதியில் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது மன்சூர் அலிகானுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து குடியாத்தத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை