நாடாளுமன்ற தேர்தல்-2024

காங்கிரஸ் கட்சியில் இணையும் நடிகர் மன்சூர் அலிகான்

காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை நடிகர் மன்சூர் அலிகான் இன்று சந்தித்து பேசினார்.

சென்னை,

இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் மன்சூர் அலிகான் வேலூர் தொகுதியில் பலாப்பழ சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டார்.

இந்த நிலையில், சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை நடிகர் மன்சூர் அலிகான் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்து மன்சூர் அலிகான் கடிதம் கொடுத்துள்ளார்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் மன்சூர் அலிகான் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு கடிதம் கொடுத்துள்ளேன். முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன். மீண்டும் தாய் கட்சியில் இணைய உள்ளேன். இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை காங்கிரசுடன் இணைக்க முடிவு செய்துள்ளேன். பிரதமர் மோடியை ஒரு சாதாரணக் குடிமகனாக கைது செய்து திகார் சிறையில் அடைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு