நாடாளுமன்ற தேர்தல்-2024

'இந்தியா' கூட்டணி அரசு அமைந்த பிறகு தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படும் - பரூக் அப்துல்லா

'இந்தியா' கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்த பிறகு வாக்குப்பதிவு இயந்திரம் இருக்காது என பரூக் அப்துல்லா கூறினார்.

தினத்தந்தி

மும்பை,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை எதிர்கொள்ள எதிர்கட்சிகள் 'இந்தியா' கூட்டணியை அமைத்துள்ளன. இந்நிலையில் தேர்தலில் 'இந்தியா' கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்த பிறகு, தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படும் என ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

மும்பையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 'இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை' நிறைவு பொதுக்கூட்டத்தில் இன்று பரூக் அப்துல்லா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"நீங்கள் உங்கள் வாக்குகளை பாதுகாக்க வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரத்தில் நீங்கள் பதிவு செய்த வாக்கு சரியாக பதிவாகி இருக்கிறதா என்பதை சோதித்துக் கொள்ள வேண்டியது அவசியம். 'இந்தியா' கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்த பிறகு இந்த இயந்திரம் இருக்காது. மேலும் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படும்."

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை