நாடாளுமன்ற தேர்தல்-2024

இந்தூர் தொகுதியில் 2ம் இடத்தில் நோட்டா

இந்தூர் தொகுதியில் 1,82,766 வாக்குகளைப் பெற்று நோட்டா இரண்டாம் இடம்பிடித்துள்ளது.

தினத்தந்தி

போபால்,

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் இந்தூர் தொகுதியில் 1,82,766 வாக்குகளைப் பெற்று நோட்டா இரண்டாம் இடம்பிடித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி இந்தூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் சங்கர் லால்வானி 10,24,859 வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார்.

இரண்டாவது இடத்தில் நோட்டா 1,82,766 வாக்குகளைப் பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் சஞ்சய் 43,342 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இந்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அக்சய் காண்டி பாம் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து