விளையாட்டு

பார்முலா1 கார்பந்தயத்தின் 2-வது சுற்று: இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம்

பார்முலா1 கார்பந்தயத்தின் 2-வது சுற்றில், இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார்.

ஸ்பில்பேர்க்,

பார்முலா1 கார்பந்தயத்தின் 2-வது சுற்றான ஸ்டிரியா கிராண்ட்பிரி, ஆஸ்திரியா நாட்டில் உள்ள ஸ்பில்பேர்க் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. 306.452 கிலோமீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். இதில் முதல்வரிசையில் இருந்து புறப்பட்ட நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 22 நிமிடம் 50.683 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்து அசத்தினார். அவருக்கு 25 புள்ளிகள் கிடைத்தது. ஒட்டுமொத்தத்தில் அவர் பெற்ற 85-வது வெற்றி இதுவாகும். அவரை விட 13.71 வினாடி பின்தங்கி 2-வதாக வந்த இதே அணியைச் சேர்ந்த பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் 18 புள்ளிகளை பெற்றார். போட்டாஸ், முதலாவது சுற்றில் வெற்றி பெற்றது நினைவு கூரத்தக்கது. நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் 3-வது இடத்தை பிடித்தார். இதன் 3-வது சுற்று போட்டி வருகிற 19-ந்தேதி ஹங்கேரியில் நடக்கிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்