இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா (20), தவான் (9) ரன்களுடன் ஆட்டமிழந்தனர்.
அணியின் கேப்டன் கோஹ்லி அரை சதம் கடந்து விளையாடி வருகிறார். அவருக்கு இது 200வது போட்டியாகும். கேதர் ஜாதவ் (12), தினேஷ் (37) ரன்களில் ஆட்டமிழந்தனர். கோஹ்லியுடன் தோனி விளையாடி வருகிறார். இந்திய அணி 39 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்துள்ளது.