பல்லகெலே,
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா - இலங்கை மோதும் 3-வது ஒருநாள் போட்டி பல்லகெலேயில் இன்று நடக்கிறது. இதிலும் வாகை சூடி தொடரை கைப்பற்றும் உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் ஆயத்தமாக உள்ளனர்.
இந்நிலையில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.