கிரிக்கெட்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி 244 ரன்களுக்கு ஆல் அவுட்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 244 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

தினத்தந்தி

சிட்னி,

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி முதலாவதாக களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 55 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது.

இதன்பின்பு நேற்று நடைபெற்ற 2வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 105.4 ஓவர்களில் 338 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் ஜடேஜா 4 விக்கெட்டுகளும், சைனி மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகளும், சிராஜ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதன்பின்னர் களமிறங்கிய இந்திய அணி 2வது நாள் ஆட்டநேர முடிவில் 5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளுக்கு 96 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து இன்று 3வது நாள் ஆட்டம் தொடர்ந்தது. இதில், ரஹானே 22 ரன்கள் (70 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தபொழுது, கம்மின்ஸ் வீசிய பந்தில் போல்டானார். தொடர்ந்து வந்த விஹாரி 4 ரன்களும், ரிஷப் பந்த் 36 ரன்களும், புஜாரா 50 ரன்களும், அஸ்வின் 10 ரன்களும், சைனி 3 ரன்னும், பும்ரா ரன் ஏதும் எடுக்காமலும், சிராஜ் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். முடிவில் ஜடேஜா 28 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இறுதியில் இந்திய அணி 100.4 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ரன்கள் 244 எடுத்தது. அதிகபட்சமாக சுப்மன் கில், புஜாரா ஆகியோர் தலா 50 ரன்கள் எடுத்தனர்.

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளும், ஸ்டார்க் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை விட 94 ரன்கள் பின் தங்கி உள்ளது. இதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு