கோப்புப்படம்  
கிரிக்கெட்

ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்ற 5 பேர் கைது

10 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐ.பி.எல் தொடரின் 17வது சீசன் நேற்று சென்னையில் தொடங்கியது.

தினத்தந்தி

சென்னை,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐ.பி.எல் தொடரின் 17வது சீசன் நேற்று சென்னையில் தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. இந்நிலையில் தொடரில் 2வது நாளான இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், சி.எஸ்.கே - பெங்களூரு அணிகள் மோதிய ஆட்டத்திற்கான டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து ஐ.பி.எல். டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்பனை செய்தது தொடர்பாக வினோத்குமார், அசோக் குமார், இமானுவேல், ரூபன், சரவணன் ஆகிய 5 பேரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 8 டிக்கெட்டுகள், ரூ.31,500 பணம் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு