கிரிக்கெட்

சேப்பாக்கம் மைதானத்தில் தொடரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் மோசமான சாதனை

ஐ.பி.எல். தொடரில் நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை - ஐதராபாத் அணிகள் மோதின.

சென்னை,

அனல் பறக்க நடந்து வரும் 17-வது ஐ.பி.எல். சீசனில் நேற்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 212 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கெய்க்வாட் 98 ரன்களும், டேரில் மிட்செல் 52 ரன்களும் குவித்தனர். இதனையடுத்து மெகா இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத், சென்னை அணியின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 134 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் சி.எஸ்.கே அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த தோல்வியின் மூலம் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணிக்கு எதிராக இதுவரை சன்ரைசர்ஸ் ஐதராபாத் வென்றதில்லை என்ற மோசமான சாதனை தொடருகிறது. இதுவரை சென்னை அணிக்கு எதிராக அங்கு விளையாடிய 5 போட்டிகளிலும் ஐதராபாத் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்