சென்னை,
19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டது. புள்ளிப்பட்டியலில் டாப்-2 இடங்களை பெற்ற நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் நேற்று மோதின.
தரம்சாலாவில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் விக்கெட்டை குஜராத் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா வீழ்த்தினார். இதன் மூலம் பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை ரபாடா படைத்தார்.
இதற்கு முன்பு 2023 சீசனில், முகமது ஷமி பவர்பிளே ஓவர்களில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி இப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். தற்போது 18-வது விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், ஷமியின் சாதனையை ரபாடா முறியடித்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் அதிக பவர்பிளே விக்கெட்டுகள்:
ககிசோ ரபாடா - 18 விக்கெட்டுகள் (2026)
முகமது ஷமி - 17 விக்கெட்டுகள் (2023)
மிட்செல் ஜான்சன் - 16 விக்கெட்டுகள் (2013)
போல்ட் - 16 விக்கெட்டுகள் (2020)