கிரிக்கெட்

அபிஷேக் சர்மா அதிரடி... 3-வது அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்த ஐதராபாத்

அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 74 ரன்கள் குவித்து பஞ்சாப் பந்துவீச்சை சிதறடித்தார்.

முல்லான்பூர்,

ஐதராபாத் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, அதிரடியான பேட்டிங்கின் மூலம் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 105 ரன்கள் குவித்து, ஐபிஎல் வரலாற்றில் 3வது அதிக பவர் பிளே ஸ்கோரை ஐதராபாத் பதிவு செய்தது. 2024ல் டெல்லிக்கு எதிராக 125 ரன்களும், லக்னோவுக்கு எதிராக 107 ரன்களும், இன்றைய பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் 105 ரன்கள் அடித்து முதல் 3 இடங்களிலும் ஐதராபாத் அணி உள்ளது.

இப்போட்டியில் அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 74 ரன்கள் குவித்து பஞ்சாப் பந்துவீச்சை சிதறடித்தார். விஜய்குமார் வைசாக் வீசிய ஓவரில் 4 சிக்ஸர்கள் அடித்து, வெறும் 18 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இதன் மூலம் 20 பந்துகளுக்குள் அதிக ஐபிஎல் அரைசதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் பதிவு செய்தார்.

மற்றொரு முனையில் டிராவிஸ் ஹெட் ஆரம்பத்தில் நிதானமாக விளையாடியாலும் பின்னர் வேகத்தை அதிகரித்து 23 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார்.