கிரிக்கெட்

இன்னும் 2 ஆண்டுகள் இந்திய அணிக்காக என்னால் விளையாட முடியும்: நெஹ்ரா சொல்கிறார்

இன்னும் 2 ஆண்டுகள் இந்திய அணிக்காக என்னால் விளையாட முடியும் என்று வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ரா தெரிவித்துள்ளார்

ராஞ்சி,

இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான முதல் 20 ஓவர் கிரிக்கெட் இன்று நடைபெறுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியில் வேகபந்து வீச்சாளர் நெஹ்ரா இடம் பிடித்துள்ளார். 38 வயதான நெஹ்ராவுக்கு அணியில் இடம் அளிக்கப்பட்டு இருப்பது பல்வேறு விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் அணியில் மீண்டும் இடம் பிடித்திருப்பது பற்றி நெஹ்ரா அளித்துள்ள பேட்டியில், காயம் காரணமாக பல போட்டிகளில் நான் பங்கேற்காமல் இருந்திருக்கிறேன். அதற்கு காரணம் பிட்னஸ் பிரச்னைதான். இதனால் அதில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

அப்படி கவனம் செலுத்தியதன் காரணமாகத்தான் இப்போது அணியில் இடம்பிடித்துள்ளேன். இன்னும் இரண்டு மூன்று வருடம் அணியில் தொடர்வேன் என நினைக்கிறேன். 38-39 வயதில் ஒரு வேகப்பந்துவீச்சாளருக்கு இது எளிமையான விஷயம் இல்லை. இருந்தாலும் சிறப்பாக ஆட முயற்சிப்பேன். புவனேஷ்வர்குமார், பும்ரா ஆகியோர் சிறப்பாக விளையாடுகிறார்கள். பாண்ட்யாவும் திறமையான வீரர். இவர்களுக்குத் தேவைப்பட்டால் ஆலோசனை வழங்குவேன் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு