கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி தடுமாற்றம்

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தடுமாறி வருகிறது.

அகமதாபாத்,

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரின் 3-வது ஆட்டம் பகலிரவு டெஸ்ட் போட்டியாக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர் மோடி மைதானத்தில் இன்று முதல் தொடங்கியுள்ளது. 3-வது டெஸ்ட் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான இதில் பிங்க் நிற பந்து கொண்ட டெஸ்ட் போட்டியாக இது நடக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இந்த டெஸ்டில் இந்திய அணி ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தொடக்க வீரர் டாம் சிப்லியும் பேர்ஸ்டோவும் ரன் எதுவும் எடுக்காமல் முறையே இஷாந்த் சர்மா மற்றும் அக்ஷர் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு வந்த ஜோ ரூட் 17 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

நன்கு விளையாடி வந்த கிராவ்லியை 53 ரன்களில் அக்ஷர் படேல் வீழ்த்தினார். 29 ஓவர்கள் நிலவரப்படி இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 81- ரன்கள் எடுத்துள்ளது. பென்ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் ஆகியோர் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்