கிரிக்கெட்

டி20 கிரிக்கெட்டில் பாபர் அசாம் புதிய வரலாறு... விராட் கோலி, வார்னர் வரிசையில் இணைந்து சாதனை

ஆசிய அளவில் விராட் கோலிக்கு அடுத்தபடியாக 2-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

கராச்சி,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம், டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல்லை எட்டி உள்ளார். ஐபிஎல் தொடரில் விராட் கோலி ரன் மழை பொழிந்து வரும் வேளையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பாபர் அசாம் சாதனை படைத்துள்ளார்.

கடந்த 15 அன்று கராச்சியில் நடைபெற்ற போட்டியில், குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிராக 155 ரன்கள் இலக்கை துரத்திய பெஷாவர் சால்மி அணியின் கேப்டன் பாபர் அசாம், 51 பந்துகளில் 71 ரன்கள் விளாசினார். இந்த இன்னிங்ஸ் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 100 அரைசதங்களை பூர்த்தி செய்த உலகின் 3-வது பேட்ஸ்மேன் என்ற பெருமையை அவர் பெற்றார்.

மேலும், டி20 கிரிக்கெட்டில் 100 அரைசதங்கள் அடித்த முதல் பாகிஸ்தான் வீரராகவும், ஆசிய அளவில் விராட் கோலிக்கு (107 அரைசதங்கள்) அடுத்தபடியாக 2-வது இடத்திலும் உள்ளார். டேவிட் வார்னர்- 116, விராட் கோலி - 107, பாபர் அசாம் - 100 அரைசதங்கள் அடித்துள்ளனர். இவ்வனைத்தும் சர்வதேச போட்டிகள் மற்றும் பல்வேறு லீக் தொடர்களில் சேர்த்து பதிவு செய்யப்பட்டவையாகும்.

SCROLL FOR NEXT