கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்: வங்காளதேச அணி அபார வெற்றி; தொடரையும் கைப்பற்றியது

இலங்கை-வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நேற்று நடந்தது.

இதில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 48.1 ஓவர்களில் 246 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. தனது 8-வது சதத்தை அடித்த விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் 125 ரன்கள் (127 பந்து, 10 பவுண்டரி) விளாசினார். அடுத்து களம் இறங்கிய இலங்கை அணி 38 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்து இருந்த போது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. மழை ஓய்ந்து மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது, டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி இலங்கை 40 ஓவர்களில் 245 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. மேற்கொண்டு 2 ஓவர்களையும் ஆடிய இலங்கை அணி 40 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 141 ரன்களே எடுத்தது. இதனால் வங்காளதேச அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்து தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இலங்கைக்கு எதிரான நேரடி போட்டித் தொடர் ஒன்றை வங்காளதேச அணி வெல்வது இதுவே முதல்முறையாகும். இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஆட்டம் இதே மைதானத்தில் நாளை மறுதினம் நடக்கிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு